ARTICLE AD BOX

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அருகிலுள்ள மணவூர் ஊராட்சியில் ஓம் சக்தி நகர் பகுதியில் முள் செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்
விரைந்து வந்த போலீசார் முள் செடி கொடிகளை அகற்றி உள்ளே இருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்
அந்த சடலத்தில் இருந்து புழு பூச்சி உடலில் இருந்து வெளியேறி உள்ளது. 7 நாட்களுக்கு மேலாக இந்த சடலம் இந்த பகுதியில் இருந்திருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது
மேலும் இந்தப் பெண் யார்? இவரை கொலை செய்தது யார்? வேறு எங்கும் கொலை செய்து இங்கு வந்து இந்த பெண் சடலத்தை வீசியது சென்றார்களா அவர்கள் யார்? போன்ற பல்வேறு கோணங்களில் திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்தப் பகுதியில் குற்ற சம்பவங்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து பணிகளில் இரவு மற்றும் பகல் வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இந்த பகுதி மக்களும் தமிழக காவல்துறை தலைவருக்கு கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
The station அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு… போலீஸ் விசாரணையில் திக் திக்..!! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.