ARTICLE AD BOX
இந்தியாவின் பெரிய பட்ஜெட் திரைப்படம்
ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் “இராமாயணா” திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது. இதில் யாஷ் இராவணனாக நடிக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கும் இத்திரைப்படத்தை நமித் மல்ஹோத்ரா, நடிகர் யாஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் 2026 தீபாவளி அன்றும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளி அன்றும் வெளியாகின்றன.
ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகிய இருவரும் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இத்திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல ஆச்சரியங்கள் கொண்ட இத்திரைப்படத்தை குறித்து மேலும் ஒரு ஆச்சரியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அவதாரையே ஓவர் டேக் செய்த இராமாயணா?
ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “அவதார்” திரைப்படத்தை நம்மால் மறந்திருக்கமுடியாது. அத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2000 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டதாகும். ஆனால் “இராமாயணா” திரைப்படத்தின் பட்ஜெட் அவதாரையே ஓவர் டேக் செய்துள்ளது.
அதாவது “இராமாயணா” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ரூ.4000 கோடி பொருட்செலவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளிவருகிறது. இத்தகவல் இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ரூ.4000 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாவதாக கூறப்படும் நிலையில் இத்திரைப்படம் இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள திரைப்படமாக கவனத்தை குவித்துள்ளது.
