ARTICLE AD BOX
எப்போதும் மாணவன்தான்…
கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை சாதித்தும் காட்டக்கூடியவர். அந்த வகையில்தாம் சமீபத்தில் அமெரிக்காவில் AI குறித்த தொழில்நுட்ப படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் அமெரிக்கா கிளம்ப உள்ளாராம். அதுவும் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட ஒரு காரியத்திற்காக கமல்ஹாசன் செல்லவுள்ளாராம்.
பிலிம் சிட்டி
அதாவது சென்னையில் திருமழிசை பகுதியில் தமிழ்நாடு அரசு ஒரு பிலிம் சிட்டியை புதிதாக நிறுவ திட்டமிட்டுள்ளதாம். அந்த பிலிம் சிட்டியை அமைப்பதற்காக கமல்ஹாசனை தலைமை ஆலோசகராக நியமித்துள்ளதாம் தமிழக அரசு. இதன் காரணத்தால் அமெரிக்காவிற்குச் சென்று அங்குள்ள பல சிறந்த நவீன சினிமா தொழில்நுட்பங்களை குறித்து அறிந்துகொள்ள உள்ளாராம். இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள உள்ளதாம்.