ARTICLE AD BOX
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துங்கி வரும் 2026 சட்மன்ற தேர்தல் தான் இலக்கு என கூறி அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என அறிவித்த அவர், தொடர்ந்து விழுப்புரத்தில் முதல் மாநாடை நடத்தி மற்ற அரசியல் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து, பரந்தூர் மக்களை சந்தித்து தனது ஆதரவை கொடுத்த அவர், மடப்புரம் அஜித்குமார் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து லாக்கஅப் மரணத்தில் உயிரிழந்த குடும்பங்களை சந்தித்து உதவிகளை வழங்கிய அவர், அஜித் மரணத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியனார்.
தீவிர அரசியல் பக்கம் திரும்பிய விஜய், தற்போது மதுரையில் 2வது மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை பாரபத்தி பகுதியில் மாநாடு நடைபெறும் நிலையில் இன்று பூமி பூஜை நடந்தது.

இதில் ஆகஸ்ட் 25 என்ற தேதியில் அவர் மாநாடு நடத்துவது பலரது கவனத்தையும் திருப்பியுள்ளது. காரணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த பிறந்நாள், விஜயகாந்த் பிறந்த ஊரில் மாநாடு நடத்துவது அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது.
அதே சமயம், ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது ரசிகையும், காதலியுமான சங்கீதாவை அவர் திருமணம் செய்தது. தனது திருமண நாளில் அவர் இரண்டாவது மாநாட்டை நடத்துவதும் கவனத்தை பெற்றுள்ளது.

300 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த பணிகள் விறுவிறுவென தொடங்கியுள்ளது. இதற்காக காவல்துறையிடம உரிய அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது. தவெக முதல் மாநாட்டில் ஓபனாக பாஜக, திமுகவுக்கு எதிராக பேசி அதகளப்படுத்திய விஜய், இரண்டாவது மாநாட்டில் என்ன பேச போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
