ARTICLE AD BOX
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில் பேசிய அமித்ஷா, “இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள். அது போன்ற சமூகம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “அந்நிய மொழியில் நமது இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது. முழுமையடைந்த இந்தியாவை, அரைகுறையான அந்நிய மொழி மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாது” எனவும் கூறியுள்ளார்.

“நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம், ஆராய்ச்சியில் ஈடுபடுவோம், உலகையே வழி நடத்துவோம். இதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 2047-ல் இந்தியா சர்வதேச அளவில் முதன்மையாக இருப்பதற்கு நமது மொழிகள் பங்களிக்கப்போகின்றன” எனவும் கூறியுள்ளார்.
அமித்ஷா இவ்வாறு பேசியது தமிழ்நாட்டில் அரசியல் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. “சமஸ்கிரதம், ஹிந்தி போன்றவற்றை திணிப்பதற்காகவே ஆங்கிலத்தை குறித்து இவ்வாறு பேசுகிறார்” என பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
