ஆசிட் ஊற்றி கணவரை துடிதுடிக்க கொலை செய்த மனைவி… நீதிமன்றம் அளித்த ஷாக் தண்டனை!

4 weeks ago 21
ARTICLE AD BOX

கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்த கதிரேச மூர்த்தி. இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு கமலக்கண்ணன் என்ற மகனும், ஹேமா தங்கேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கதிரேசமூர்த்தி நில அளவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கதிரேசமூர்த்தி குடும்பத்துடன் கோவை செட்டி வீதி அசோக் நகர் பகுதியில் ரூபாய் 4 லட்சத்திற்கு பாக்கியத்திற்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் , மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து உள்ளனர்.இதற்கு இடையே இவர்களது மகள் மாற்று ஜாதியைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்ததாக தெரிகிறது.

இதனால் கதிரேசமூர்த்தி ஆத்திரம் அடைந்தார். மகளை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இது ஜோதிமணிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. குடும்ப செலவுக்கு கதிரேசன் மூர்த்தியிடம் மனைவி பணம் கேட்கும் நிலை இருந்து வந்தது.

கடந்த 2021 அன்று குடும்ப செலவுக்கு மனைவி பணம் கேட்ட போது தர முடியாது என்று மறுத்ததுடன், உறவினர்களுடன் குடும்பப் பிரச்சனை குறித்து பேசி முடித்த பின் தான் பணத்தை தருவேன் என்று கூறி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி கணவருடன் தகராறு செய்து உள்ளார்.

பின்னர் நகை செய்ய பயன்படுத்தும் ஆசிடை எடுத்து வந்து கணவர் மீது ஊற்றியதாக தெரிகிறது. இதில் கதிரேசமூர்த்தி கதறி துடித்தார். அப்பொழுது அவர் தப்பி வெளியே வராமல், இருப்பதற்காக அறை கதவுகளையும் வெளிப்புறமாக பூட்டி விட்டார்.

கதிரேச மூர்த்தியின் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கதிரேசமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செல்வபுரம் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து ஜோதி மணியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சிவக்குமார் ஜோதிமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

  • Fighting coach pays tribute to Robo Shankar நாம செத்தால் பணம் கூடவே வராது… ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சண்டை பயிற்சியாளர் உருக்கம்!
  • Continue Reading

    Read Entire Article