’ஆஜராக முடியாது’.. சம்மன் கிழிப்பு.. Sorry கேட்ட சீமானின் மனைவி.. அடுத்தடுத்து பரபரப்பு!

2 weeks ago 8
ARTICLE AD BOX

நாளை என்னால் ஆஜராக முடியாது, என்னை என்ன செய்ய முடியும் என சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், சீமான் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக மோசடி செய்ததாக எழுந்த புகாரில், மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், சீமானை இன்று (பிப்.27) நேரில் ஆஜராகக் கூறி, வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இதனால், அவருக்கு மீண்டும் சம்மன் வழங்க போலீசார், அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால், அவரது வீட்டில் சம்மனை ஒட்டினர். இது சில நொடிகளிலேயே சீமான் வீட்டு உதவியாளரால் கிழிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பாதுகாவலரை கைது செய்ய போலீசார் முற்பட்டனர்.

அப்போது அங்கு தள்ளுமுள்ளும், பாதுகாவலர், போலீசாரை நோக்கி துப்பாக்கி நீட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர். அப்போது, சீமானின் மனைவி போலீசிடம் Sorry எனக் கேட்ட வீடியோ வைரலாகி பரபரப்பானது.

Seeman about summon tear

இந்த நிலையில், ஓசூரில் கட்சிக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “எனக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியபோது நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது, எனவே வரமுடியாது, நிகழ்ச்சிகள் முடிந்ததும் வருகிறேன் எனத் தெரிவித்திருக்கிறேன். தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறேன்.

எனவே, என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் எங்கு இருக்கிறது? இந்த அரசு இதேபோல் வேறு எதிலாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா எனப் பாருங்கள். நான் இங்கு நிகழ்ச்சியில் இருப்பது, இங்கு பாதுகாப்பில் இருக்கும் காவலர்களுக்கும், அங்கு இருக்கும் காவலர்களுக்கும் தெரியும்.

இருந்தும் ஏன் என் வீட்டில் சம்மன் ஒட்ட வேண்டும்? அதனால், அங்கு இருந்த என் தம்பி ஒருவர் அதனைக் கிழித்துவிட்டார். நான்தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேனே, பிறகு ஏன் இந்த வேலை செய்கிறீர்கள்? நாளை 11 மணிக்கு வந்தாக வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னால் வரமுடியாது, என்ன செய்ய முடியும்?

இதையும் படிங்க: வாத்தியம் வாசித்த மூதாட்டிக்கு பளார்.. சாரி கேட்க மறுத்த கோவில் பூசாரி அடாவடி!

என்னை எதுவும் செய்ய முடியாது. திமுக ஆட்சிக்கு வரும்போது மட்டும்தான் இந்த விவகாரம் வெளியே வரும். குறிப்பாக, என்னைச் சமாளிக்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணை அழைத்து வருவார்கள். நான்தான் நீதிமன்றத்தில் இந்தப் புகாரை நிராகரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தேன்.

அங்கிருந்த நீதிமான், இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு தருகிறார். விசாரணை நடத்திவிட்டுத்தானே தீர்ப்பு எழுத வேண்டும். அதைவிட்டு, இதுவெல்லாம் நடந்திருக்கும் எனக் கூறிவிட்டுத் தீர்ப்பு எழுதினால் விசாரணை எப்படி நடக்கும்?” எனத் தெரிவித்தார்.

  • இந்த படம் ஓடியது கதைக்காக அல்ல.. ரஜினி படத்தை விமர்சித்த பிரபல நடிகர்!!
  • Continue Reading

    Read Entire Article