ARTICLE AD BOX
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சாமானியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் சிறுக சிறுக பணம் சேர்ந்து கிராம் கணக்கில் மட்டும் வாங்ககூடிய சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒரு கிராம் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆடி மாதம் எந்த முகூர்த்தமும் இல்லாததால், ஆடி மாதத்தை தங்கம் வாங்குபவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம்.
எந்த மாதமாக இருந்தால் என்ன விலை உயரத்தான் செய்யும் என்பதை போல, ஆடி மாதமும் விலை உயர்ந்தது. ஆனால் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிரடியாக விலை சரிந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.75,040 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 125 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.74,040க்கு விற்பனையாகிறது. அதே போல வெள்ளி ஒரு கிராம் ரூ.128 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று ஒரு ரூபாய் குறைவாக உள்ளது.

இனி வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது என்றாலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
