ARTICLE AD BOX
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சாமானியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் சிறுக சிறுக பணம் சேர்ந்து கிராம் கணக்கில் மட்டும் வாங்ககூடிய சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒரு கிராம் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆடி மாதம் எந்த முகூர்த்தமும் இல்லாததால், ஆடி மாதத்தை தங்கம் வாங்குபவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம்.
எந்த மாதமாக இருந்தால் என்ன விலை உயரத்தான் செய்யும் என்பதை போல, இந்த மாதம் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை நேற்றைய விலையை விட ரூ.95 உயர்ந்து 9,380 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 129 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,29,000க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 9,285 ரூபாயாகவும். சவரனுக்கு 74,280 ரூபாயாகவும் விற்பனையானது. தற்போது 75 ஆயிரம் ரூபாயை கடந்து தங்கம் விற்பனையாவது மக்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

3 months ago
39









English (US) ·