‘ஆடி’ ஷோரூம் கொடுத்த இன்ப அதிர்ச்சி : மகிழ்ச்சியில் ஆடிப்போன வாடிக்கையாளர்கள்..!!

18 hours ago 6
ARTICLE AD BOX

கோவை மாவட்டம் ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வருடம் தோறும் அவரது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்க: முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க அப்பாயிண்ட் கிடைக்குமா? காத்திருக்கும் விஜய்..!

இந்த வருடம் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சியானது வாளையாறு பகுதியில் உள்ள வின்னர்ஸ் ஹில் ரெசார்டில் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட் நிறுவனர் சி.கே.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடி கார் வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர். வாடிக்கையாளர்களுக்கு இந்த ரெசார்ட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று சி.கே.கண்ணன் விளக்கிக் கூறினார்.

மேலும் வாடிக்கையாளர்களை அவரே ஜீப்பில் அழைத்து சென்று ஆஃப் ரோடு ரைடு நடத்திக் காட்டினார். மேலும் அவர் பேசுகையில், இயற்கை எழிலுடன் அமைந்த மலைப்பகுதி, குழந்தைகள் விளையாடக்கூடிய பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட அறைகள், ஹார்ஸ் ரைட், சுமார் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சமைக்கும் நவீன உணவுக்கூடம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது என கூறினார்.

மேலும் இங்கு வந்த ஆடி கார் வாடிக்கையாளர்கள் கூறும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கறது எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த கோயம்புத்தூர் ஆடி கார் நிறுவனத்திற்கும், வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

நிகழ்ச்சியில் கோவை ஆடி கார் ஷோரூம் ஜெனரல் மேனேஜர் விவேக் மற்றும் ஆடி கார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • producer dil raju started website for film making enthusiasts படம் பண்ணனுமா? இந்த வெப்சைட்ல ரிஜிஸ்டர் பண்ணுங்க!- விஜய் பட தயாரிப்பாளரின் புது முயற்சி!
  • Continue Reading

    Read Entire Article