ARTICLE AD BOX
மீனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஏராளமான ஆடுகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “சிங்கம் ஆடுகள் தன்னைப் பற்றி என்ன நினைக்கின்றன என்பதைப் பற்றி கவலைப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், King Voice சேனலுக்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முதலில் நயன்தாரா இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், பின்னர் சுந்தர் சி, நயன்தாராவே நடித்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினார். அதை தயாரிப்பாளர் ஐசரி கணேசும் ஏற்றுக்கொண்டார்.
இதையும் படியுங்க: டிரெண்டிங் ஆன ‘அண்ணன பாத்தியா’ பாடல்..ரீல்ஸ் எடுத்து வைப் செய்யும் பிரபலங்கள்.!
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டு படங்கள் வெற்றி பெற்றவுடன், நயன்தாரா தனது மதிப்பு உயர்ந்துவிட்டதாக எண்ணத் தொடங்கினார். ஹீரோ இல்லாமலேயே தனது படங்கள் வெற்றி பெறுவதால், இயல்பாகவே ஒரு தன்னம்பிக்கை, சில சமயங்களில் திமிரும் வரலாம்.
இருப்பினும், நயன்தாரா காலத்தில் அவர் நம்பர் 1 என்றால், மீனா காலத்தில் மீனாவே நம்பர் 1 ஆக இருந்தார். ஆனால், மீனா இப்படியொரு இன்ஸ்டா பதிவை ஏன் போட்டார் என்று புரியவில்லை,” என்றார்.
மேலும் அவர், “ஆடுகள் என்று யாரைக் குறிப்பிட்டாலும், அது மிகவும் தரக்குறைவான சொல். ஆடுகளுக்கு சிந்திக்கும் திறன் இல்லை. ஒரு ஆடு எங்கு செல்கிறதோ, மற்றவையும் அதைப் பின்பற்றும். பசுமையான தாவரங்களைப் பார்த்தால், இப்போது மேயும் இடத்தை விட்டுவிட்டு அங்கு ஓடிவிடும். நுனிப்புல் மேய்வதுதான் ஆடுகளின் பழக்கம். அதனால், ‘ஆடுகள்’ என்று குறிப்பிட்டு மீனா மிகவும் ஆழமான ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்,” என்று விளக்கினார்.
அதேபோல், “லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு யார் கொடுத்தது என்பது பத்திரிகையாளர்களுக்கே தெரியாது. அவரை புகழ்ந்து பேச யாரோ ஒரு இயக்குநர் அதை சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தாலும், நயன்தாரா அதை ஏற்காமல் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை முதலில் பெற்றவர் விஜயசாந்தி. அவர் இன்னும் உயிருடன் இருக்கும்போது, நயன்தாரா எப்படி அந்த பட்டத்தை தனதாக்க முடியும்? ‘நீயா லேடி சூப்பர் ஸ்டார்?’ என்று அனைவரும் கேலி செய்ததால்தான், ஒருவேளை அவர் அந்த பட்டத்தை விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கலாம்,” என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

9 months ago
95









English (US) ·