ARTICLE AD BOX

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திததார். அப்போது அவரிடம் தமிழகத்தில் ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு வழங்கப்படுமா என கேட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த இபிஎஸ், நாங்கள் வலுவான கூட்டணியா? வலுவில்லாத கூட்டணியா என்பது தேர்தல் நேரத்தில் தெரியும். எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளது,
இதையும் படியுங்க: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி மோதலை ஏற்படுத்த சதி? இந்து முன்னணி பிரமுகர் அதிரடி கைது!
அதிமுக எங்களுடைய கட்சி, நாங்க யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், திமுகவுக்கு ஏன் எரிச்சல்? அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.
சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி என்று தான் அமித்ஷா சொல்லியிருக்காரே தவிரஇ கூட்டணி அரசு என்று சொல்லவில்லை. நீங்கள் தப்பா புரிந்துகொண்டுள்ளீர்கள். அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆனால் பங்கு கிடையாது.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்எ என்பதே நிலைப்பாடு.பாஜகவுடன் கூட்டணி மட்டுமே.. ஆட்சியில் இல்லை. ஆட்சியில் பங்கு என்று பாஜகவினரும் கூறவில்லை நாங்களும் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The station ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு கிடையாது.. கூட்டணி பற்றி திமுகவுக்கு ஏன் எரியுது? இபிஎஸ் விளாசல்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.