ARTICLE AD BOX
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் கவின் என்பவர் நேற்று முன்தினம் நெல்லையில் வைத்து சுர்ஜித் என்ற வாலிபரரால் ஆணவ படுகொலை செய்யப்பட்டார.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கவினின் உறவினர்கள் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கவின் தோழியான சுபாஷ்னியின் தாய் தந்தையர் ஆன காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் கவினின் தந்தை சந்திரசேகர் கூறும் போது, தூத்துக்குடியில் தனது மகன் கவின் படித்த பள்ளியில் கவின் தோழி சுபாஷ்னியும் படித்துள்ளார்.
அப்போது இருந்தே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது வரை கவினும் சுபாஷினியும் பழகி உள்ளனர். அதற்கான புகைப்பட ஆதாரங்கள் மற்றும் செல்போனில் அவர்கள் பேசியது ஆகியவை உள்ளன
இந்நிலையில் அந்தப் பெண் சுபாஷினி, தனது மகனை திருமணம் செய்ய வேண்டும் திருமணம் செய்தால் உன்னைத்தான் செய்து கொள்வேன் எனக் கூறி அடிக்கடி டார்ச்சர் செய்துள்ளார்.
ஆனால் நாங்கள் எங்களது மகனை கண்டித்தோம் ஆனால் தொடர்ந்து சுபாஷினி எனது மகனை டார்ச்சர் செய்து வந்தார் .
இந்நிலையில் எனது மகனுக்கும் எனது மனைவிக்கும் சுபாஷினியின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணவேணி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
தனது பையனுடன் சுபாஷினி பழகி வருவது அவரது தம்பிக்கு நன்றாக தெரியும். சம்பவத்தன்று தனது மாமாவிற்கு கால் முறிவு ஏற்பட்டது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக தனது மகனை மருத்துவமனைக்கு சுபாஷினி அழைத்தார்.
அதன் பேரிலியே தனது மகன் சென்றதாகவும் அப்போது ஏற்கனவே தனது மகனை தெரிந்த சுபாஷினியின் தம்பி அழைத்ததால் அவருடன் சென்று பேசிக் கொண்டிருக்கும் போது சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்துள்ளார்.
தங்களுக்கு அரசு சார்பில் வழங்கும் நிதி வேண்டாம் நீதிதான் வேண்டும் இந்த கொலைகள் தொடர்புடைய குற்றவாளியின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்.
கொலையாளி சுஜித் கவின்குமாரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து மிளகாய் பொடி தூவி வெட்டி கொலை செய்திருக்கிறார். ஆகவே இந்த கொலையில் பெண்ணின் பெற்றோர்கள், பெண் ஆகியோரும் உடந்தையாக இருப்பதால் மூவரையும் கைது செய்ய வேண்டும்.
பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் தங்களிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் கையெழுத்து வாங்கி பிரேத பரிசோதனை செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.
காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. இந்த ஆணவ படுகொலைகள் அதிகமாக நடந்து வருகிறது ஆணவக் கொலை இதோடு முடிவுக்கு வர வேண்டும்.
காவல்துறை சார்ந்த குடும்பம் என்பதால் கவின்குமார் ஆணவ கொலை வழக்கை காவல்துறை விசாரிப்பது சரியல்ல. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தனி சட்டம் போட வேண்டும் ஆணவக் கொலைகள் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறை இதுவரை எதுவும் செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.
