ARTICLE AD BOX
பெண்ணாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
நடிகை கஸ்தூரி திரைப்படத் துறையிலும்,தொலைக்காட்சித் துறையிலும் மட்டுமல்லாமல்,அரசியல் மற்றும் சமூக விவகாரங்களிலும் தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்க: ‘ஜனநாயகன்’ படத்தில் களமிறங்கும் முக்கிய இயக்குனர்கள்…விஜய் போட்ட ஸ்கெட்ச்சா.!
சமூக வலைத்தளங்களில் மிகவும் செயல்பாட்டுடன் இருக்கும் இவர்,சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றிய கூறிய கருத்துகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது படங்கள், தொடர்கள் என பிஸியாக இருந்தாலும்,சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார்.
பொதுவாக,ஆண்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஒரு பெண் குடித்து,குடும்பத்தை கவனிக்காமல் அழித்து விட்டாள் என்ற பேச்சை நீங்கள் கேட்டு இருக்கீங்களா,ஆனால், ஒரு ஆண் காரணமாக அழிந்த குடும்பங்கள் அதிகமாக உள்ளன.
ஒரு வீட்டின் சாவி ஒரு பெண்ணிடம் இருந்தால்,அவர் அந்த குடும்பத்தை உயர்த்த முயற்சிப்பார்.ஆனால் ஒரு ஆண்,ஒரு நூறு ரூபாய் இருந்தால்,அதை உடனடியாக செலவழித்து விடுவார்,ஆனால் ஒரு பெண் அந்த 100 ரூபாயை குடும்பத்திற்காக எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்று சிந்திப்பார்,கடைசியில் அந்தத் தாய்க்கு எதுவும் இருக்காது.
நான் ஒரு பெண்ணாக பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன்,நான் பல பெண்களுக்கு ஆண்கள் செய்ய முடியாத உதவிகளை செய்து இருக்கிறேன்,என் சகோதரிகள்,என் குழந்தைகள்,மற்றும் என் சுற்றியுள்ள பெண்களுக்கு நான் உதவிகள் செய்துள்ளேன்,பெண்ணாக இருப்பதால்,அவர்களுக்கு உதவ முடிந்தது என்று நான் நம்புகிறேன்.
கஸ்தூரியின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி விவாத பொருளாக மாறியுள்ளது.

7 months ago
89









English (US) ·