ARTICLE AD BOX
பாக்யராஜ் பட நடிகை
மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்வேதா மேனன். இவர் 1991 ஆம் ஆண்டு “அனஸ்வரம்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்கத் தொடங்கிய ஸ்வேதா மேனன், தமிழில் “சிநேகிதியே”, “நான் அவன் இல்லை 2”, கே பாக்யராஜ் நடித்த “துணை முதல்வன்” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 51 வயதான ஸ்வேதா மேனன் நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் ஸ்வேதா மேனன்
கேரளாவைச் சேர்ந்த மார்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர் ஒருவர் ஸ்வேதா மேனன் மீது புகார் அளித்திருந்த நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றம் இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து ஸ்வேதா மேனன் மீது ஆபாசத்தை தடுக்கும் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 15 ஆம் தேதி மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சங்கத் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடும் நிலையில்தான் தற்போது அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது பலருக்கும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
