ஆமிர்கானின் மாஸ் என்ட்ரி? கூலி படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ…

1 month ago 16
ARTICLE AD BOX

எகிறும் எதிர்பார்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் Pre Release Event இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் தனது சமுக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

Aamir Khan entry in coolie pre release event

ஆமிர்கானின் மாஸ் என்ட்ரி!

அதாவது “கூலி” திரைப்படத்தின் Pre Release Event-ல் கலந்துகொள்வதற்காக  ஆமிர்கான்  வந்துள்ளார். அவர் விழா நடக்கும் இடத்திற்கு காரில் மாஸ் ஆக வந்திறங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. “கூலி” திரைப்படத்தில் ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ஆமிர்கானை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். 

#Coolie censored 🅰️ #Coolie releasing worldwide August 14th 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhrupic.twitter.com/p2z6GEOb6K

— Sun Pictures (@sunpictures) August 1, 2025

“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் அளித்துள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக யூகிக்க முடிகிறது. 

  • Aamir Khan entry in coolie pre release event ஆமிர்கானின் மாஸ் என்ட்ரி? கூலி படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ…
  • Continue Reading

    Read Entire Article