ARTICLE AD BOX

பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் வெட்டி படுகோலை செய்யப்பாட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பெரம்பூரில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்துசெல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தையொட்டி அந்த வழித்தடம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் சவப்பெட்டியில் ‘ஜெய்பீம்’, ‘சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்குக்கு வீரவணக்கம், சமத்துவ தலைவருக்கு வீரவணக்கம், ஜெய்பீம் என்ற கோஷங்கள் விண்ணை முட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வல வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
கூட்டம் அதிகமாக இருப்பதால், ஆம்ஸ்ட்ராங் உடலைச் சுமந்தபடி இறுதி ஊர்வல வாகனம் மெதுவாகச் சென்று வருகிறது. இந்த இறுதி ஊர்வலத்தின்போது, “பாதுகாப்பில்லை.. பாதுகாப்பில்லை.. தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை.. விடமாட்டோம் விடமாட்டோம்.. கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம் ” என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
The station ஆம்ஸ்டிராங் சவப்பெட்டியில் அந்த வார்த்தை.. விண்ணை பிளந்த ‘விடமாட்டோம் விடமாட்டோம்’ கோஷம்! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.