ARTICLE AD BOX
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்
தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (49). விவசாயி. இவர் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதையும் படியுங்க: தேடி தேடி பத்திரிகை வைத்த கிங்காங்… புறக்கணித்த பிரபலங்கள் : காரணம் இதுதானா?
சிறையில் உள்ள தண்டனை கைதிகளை பல்வேறு பணிகளுக்காக காலை 5:30 மணி அளவில் வெளியில் அழைத்து சென்று மீண்டும் எட்டு மணிக்கு சிறைக்கு மீண்டும் கூட்டி செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை சிறைபணிக்காக காலை 5-30 மணி அளவில் ராஜேந்திரன் அழைத்துச் செல்லப்படார். சிறை பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேந்திரன் திடீரென மாயமானார். அவரை சிறை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராஜேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.