ARTICLE AD BOX
வித்தியாசமான படைப்பு
லியோ ஜான் பவுல் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள “மார்கன்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, பிரிகிடா சாகா, பிரீத்திகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்தும் உள்ளார்.
“மார்கன்” படம் பார்த்த பலரும் இத்திரைப்படம் சுவாரஸ்யமான ஒரு திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் எனவும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கவலைக்கிடமான வசூல்?
ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள “மார்கன்” திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.85 லட்சமே வசூல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் வார இறுதி நாட்களில் இத்திரைப்படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இத்திரைப்படம் இந்திய அளவில் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவருகிறது.