ARTICLE AD BOX
பாடுவதற்கு தடை
2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களில் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த புகாரை தொடர்ந்து வைரமுத்துவுக்கு திரைப்பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லாமலே போனது.
 அதனை தொடர்ந்து டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தால் அப்போது யூனியனின் தலைவராக இருந்த ராதா ரவி, சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து தடை செய்தார். ஆனால் ராதா ரவியின் மீது தான் Me Too புகாரை எழுப்பியதால்தான் அவர் தன்னை டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றினார் என சின்மயி குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து சின்மயி தமிழ் திரைப்பாடல்கள் பாடுவதற்கும் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு சின்மயி எந்த தமிழ் திரைப்பாடல்களையும் பாடவில்லை.
கம்பேக் கொடுத்த சின்மயி
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை சின்மயி பாடியது ரசிகர்கள் பலரையும் ஈர்த்தது. அவரை மீண்டும் தமிழ் திரைப்பாடல்களை பாட வைக்க வேண்டும் என ஆதரவு குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் கே எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான், சின்மயியை பாட வைத்துள்ளார்.
இது குறித்து டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் சின்மயியுடன் தான் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கே எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திற்காக டி இமான் இசையில் சிநேகன் வரிகளில் இப்பாடலை பாடியுள்ளார் சின்மயி. இதன் மூலம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து சின்மயி தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார். இச்செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
                        4 months ago
                                51
                    








                        English (US)  ·