ARTICLE AD BOX
களைகட்டிய பாடல்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இத்திரைப்படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜிங்குச்சா” என்ற பாடல் நேற்று சிங்கிளாக வெளியிடப்பட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் சிம்புவும் சான்யா மல்ஹோத்ராவும் ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது. 2K கிட்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் செம Vibe-ஆக இருந்தது என்றுதான் கூறவேண்டும். அந்தளவிற்கு இப்பாடல் நேற்று இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டது.
எப்படி இங்கிலிஷ்ல பேசுவேன்!
அதே வேளையில் நேற்று “தக் லைஃப்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளின் பத்திரிக்கையாளர்களை எல்லாம் இந்த விழாவிற்கு வரவழைத்திருந்தார்கள். ஆதலால் மேடையில் பேசிய நட்சத்திரங்களை எல்லாம் ஆங்கிலத்தில் பேசும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இம்மேடையில் பேசிய நடிகை அபிராமி, “எல்லோருக்கும் வணக்கம், ஆங்கிலத்தில் பேசச்சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் ரசிகர்களின் மத்தியில் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது” என்று கூறினார். இவர் இவ்வாறு பேசியவுடன் அரங்கத்தில் பலமான கைத்தட்டல்கள் எழுந்தன. மேலும் அபிராமியின் இப்பேச்சை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

6 months ago
65









English (US) ·