ARTICLE AD BOX
5 கோடி இழப்பீடு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இந்நாள் வரை உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தவே எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தில் ஆங்காங்கே இடம்பெற்ற தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்கள் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தன. அதில் இளையராஜாவின் “இளமை இதோ இதோ”, “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி” போன்ற பாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தனது அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா. இச்செய்தி அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தர்மமா?
இந்த நிலையில் மதுரை அடங்காத அஜித் குரூப்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் “குட் பேட் அக்லி திரைப்படமாக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் 3 பாடல்களுக்கு 5 கோடி கேட்பது நியாயமா? அவசியமா? இது தர்மமா?
ஐயா இசைஞானியே, இருக்கும் இடத்தில் இருந்து சிந்திக்காதீர்கள், வந்த பாதையை நினைத்துப் பாருங்கள்! AK ரசிகர்களின் அன்பான வேண்டுகோள்” என்று போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


6 months ago
73









English (US) ·