ARTICLE AD BOX
சூர்யா 45
“ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யாக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் இவர்களுடன் யோகி பாபு, ஷிவதா, சுவாசிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் சூர்யா கருப்பசாமியாக நடித்துள்ளாராம். கருப்பசாமி ஒரு வழக்கறிஞராக இந்த பூமியில் அவதாரம் எடுத்து வாழ்கிறாராம். இதுதான் இத்திரைப்படத்தின் மையக்கரு என்று கூறப்படுகிறது.
திடீரென மாறிய டைட்டில்
இத்திரைப்படத்திற்கு ஆர்ஜே பாலாஜி, “வேட்டை கருப்பு” என்று டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இணையத்தில் கசிந்த இந்த தகவலால் தற்போது டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது “வேட்டை கருப்பு” என்ற டைட்டிலை “கருப்பு” என்று மாற்றியுள்ளாராம்.
வருகிற ஜூன் 20 ஆம் தேதி ஆர்ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு “சூர்யா 45” திரைப்படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா இதற்கு முன்பு நடித்த “கங்குவா”, “ரெட்ரோ” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. குறிப்பாக “கங்குவா” பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வியடைந்தது. அந்த வகையில் “சூர்யா 45” திரைப்படம் நிச்சயம் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது தனது 46 ஆவது திரைப்படத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.