ARTICLE AD BOX
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் ரசிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கப்பட்டுள்ளது ஒரு பக்கம் விமர்சனம் எழுந்து வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், அஜித், திரிஷா, சிம்ரன், பிரசன்னா, அர்ஜூன் தாஸ் என முன்னணி நடிகர்களுடன் வெளியானது.
இதையும் படியுங்க: உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!
படத்தில் ஏராளமான சஸ்பென்ஸ் வைத்துள்ளார் ஆதிக். ஆனால் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை, மாறாக பழைய பாடல்களை படத்தில் அதிகளவு பயன்படுத்தியுள்ளதால் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடுநிலையான சினிமா பார்வையாளர்கள் படத்திற்கு கலவையான விமர்சனத்தையே கொடுத்துள்ளனர். இதனால் போக போகத்தான் படத்தன் வெற்றியை பற்றி முழு விபரமும் தெரியவரும.

இந்த நிலையில் படம் ரிலீசான சில மணி நேரங்களில் இணையத்தில் HD தரத்துடன் குட் பேட் அக்லி படம் லீக்காகியுள்ளது. முதல் காட்சி முடிந்த சில மணி நேரங்களில் படம் முழுவதும் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
