ARTICLE AD BOX
நேற்று யோகிடா இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சாய் தன்ஷிகா நடித்துள்ள இந்த படம் வெற்றியடையுமோ இல்லையோ ஆடியோ வெளியீட்டு விழா வெற்றி என்றே சொல்லலாம்.
காரணம் விஷால், சாய் தன்ஷிகாவை திருமணம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டதுதான். தனது திருமணம் குறித்து நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகு வெளியிடுவேன் என கூறிய விஷால், திடீரென நேற்று யோகிடா இசை வெளியீட்டு விழாவில், சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இவ்ளோ நாள் இவர்கள் காதல் செய்தது யாருக்கு தெரியவில்லை, சில மாதங்கள்தான் இவர்கள் காதலிக்கவே தொடங்கியுள்ளதாக இருவரும் இசை வெளியீட்டு விழாவில் அறிவித்தனர்.
அதே போல வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாகவும், சாய் தன்ஷிகா இப்போது எப்படி சிரித்த முகத்துடன் இருக்கிறாரோ அப்படியே வைச்சு பாத்துக்குவேன் என வெட்கப்பட கூறினார்.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, இது இசை வெளியீட்டு விழாவா இல்லை நிச்சயதார்த்தமா? தட்டு மட்டும் மாத்தல, அதுக்குள்ள மத்ததெல்லாம் விஷால் அறிவிச்சிட்டாரு.

விஷால் தப்பு பண்ணிட்டாரு.. கொஞ்ச நாள் கிசுகிசு பறக்க விட்டிருக்கணும்.. பொசுக்குனு ஜோடியாக உட்காந்துட்டாங்க.. எடுத்த உடனே கிளைமேக்ஸை ரிலீஸ் பண்ணிட்டாரு என கலகலவென பேசினார்.

5 months ago
62









English (US) ·