ARTICLE AD BOX
காமெடியன் டூ ஹீரோ
தொடக்கத்தில் சினிமாத்துறையில் எலெக்ட்ரீசியன், பெயின்ட்டர் போன்ற சின்ன சின்ன தொழில்களை செய்து வந்த சூரி, ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது அவரது மார்க்கெட் வேற லெவலில் உள்ளது.
இவ்வாறு கடினமாக உழைத்தால் எவர் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் சூரி, “மாமன்” திரைப்படத்தை தொடர்ந்து சூரி “மண்டாடி” என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கும்மியாட்டம் ஆடிய சூரி
இந்த நிலையில் நடிகர் சூரி கும்மியாட்டம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சூரி தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் “எங்கள் ராஜாக்கூர் கிராமத்தில் திருவிழா இன்று மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக தொடங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் சூரி பல பெண்களின் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியாக கும்மியாட்டம் ஆடுகிறார். மேலும் தனது கிராமத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
எங்கள் ராஜாக்கூர் கிராமத்தில் திருவிழா இன்று மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக தொடங்கியது! 🎉❤️🙏💐💐💐 pic.twitter.com/iJVR7k3qaC
— Actor Soori (@sooriofficial) August 4, 2025

4 months ago
56









English (US) ·