ARTICLE AD BOX
பாத்ரூம் கழுவிய அஸ்வத் மாரிமுத்து
தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் இயக்குனர்களில் ஒருவரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
இதையும் படியுங்க: ஐடி ரைடில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா..கை விரித்த நீதிமன்றம்..முடிவு யார் கையில்.!
இந்த நிலையில் இவருடைய முதல் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் அசோக் செல்வன் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவானது,இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடித்திருப்பார்கள்,விஜய்சேதுபதி இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார்,
ஒரு நாள் அறிமுக இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்ட போது நடிகை ரித்திகா சிங் பாத்ரூம் போக வேண்டும்,இங்க எங்கே இருக்கு என கேட்டுள்ளார்,அப்போது ஒரு சிறிய லாட்ஜில் தான் ரூம் போட்டுள்ளனர்,அதில் ஒரே ஒரு பாத்ரூம் மட்டுமே இருந்துள்ளது.
படக்குழு ரித்திகா சிங்கை அங்கே ஒரு பாத்ரூம் உள்ளது,நீங்கள் அதை பயன்படுத்திக்கோங்க என கூறியுள்ளது,ரித்திகா சிங் பாத்ரூம் கதவை எட்டி பார்த்து விட்டு,இதுலா ஒரு ரெஸ்ட் ரூமா என ஷூட்டிங் ஸ்பாட்டில் கடிந்துள்ளார்.
அது இரவு நேரம் என்பதால் முக்கியமா ஆட்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருந்துள்ளனர்,இதனால் கொஞ்சோ கூட யோசிக்காமல் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடனடியாக அந்த பாத்ரூமை சுத்தம் செய்ததாக நடிகர் செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.அப்போது அந்த பேட்டியில் இருந்த அஸ்வத் மாரிமுத்து என்னுடைய படப்பிடிப்பிற்கு எந்த காரணத்தினாலும் தடங்கள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் என ரொம்ப எதார்த்தமாக பேசியிருப்பார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலர் அஸ்வத் மாரிமுத்துவின் நெகிழ்ச்சியான செயலை பாராட்டி வருகின்றனர்.

8 months ago
57









English (US) ·