ARTICLE AD BOX
பயமூட்டும் வில்லன்
தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் வில்லன் கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆதலால் பெண்களின் மத்தியிலும் இவரது நடிப்பு சற்று பயத்தை உண்டு பண்ணக்கூடியது. எனினும் பின்னாளில் குணச்சித்திர கதாபாத்திரம், நகைச்சுவை கதாபாத்திரம் என கலந்துகட்டி நடிக்கத் தொடங்கிவிட்டார் ஆனந்த்ராஜ்.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான “பிகில்” திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகளை நீக்கியது குறித்து ஆதங்கத்தோடு ஒரு பேட்டியில் பேசியுள்ளார் ஆனந்த்ராஜ்.
நீங்க எல்லாம் ஒரு இயக்குனரா?
அப்பேட்டியில் நிருபர், “பிகில் படத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். அந்தளவுக்கு அந்த படத்தில் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருந்தது? என கேட்டார்.
அதற்கு ஆனந்த்ராஜ், “ஒரு கதாபாத்திரத்திற்கு அறிமுக காட்சி என்று ஒன்று இருக்கும். பிகில் படப்பிடிப்பில் என்னுடைய அறிமுக காட்சியை படமாக்கினார்கள். ஆனால் பிகில் படத்தில் அந்த காட்சி இடம்பெறவில்லை. அந்த காட்சியையே வைக்கவில்லை என்றால் எப்படி ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தை காட்டப்போகிறீர்கள்.
அந்த காட்சி இடம்பெறவில்லை என்று தெரிந்தவுடன் ஏன்? என்ற கேள்விதான் எனக்குள் எழுந்தது. இது யார் செய்த பாவம்? எனக்கும் உங்களுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்சனையா? அந்த காட்சியை எடுக்காமல் இருந்தாலாவது பரவாயில்லை. ஆனால் அந்த காட்சியை எடுத்தும் படத்தில் வைக்கவில்லை என்றால் யாரை கோபித்துக்கொள்வது.
பின்பு எதற்கு அந்த படத்தை பார்க்கவேண்டும்? வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டேன். ஒரு அறிமுக காட்சியை கூட உங்களால் வைக்க முடியவில்லை என்றால் அப்படி என்னதான் பண்ணப்போகிறோம்?” என மிகவும் ஆதங்கத்தோடு பதிலளித்திருந்தார்.
இது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!

5 months ago
43









English (US) ·