ARTICLE AD BOX
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் “கருப்பு”. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஷிவதா, சுவாஸிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று சூர்யாவின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “கருப்பு” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. “கற்பூரம் காட்டி கண்ணுல ஒத்திக்கிற சாந்தமான சாமி இல்லை, மனசார வேண்டிகிட்டு மிளகாய் அரைச்சா உடனே நியாயம் கொடுக்குற முரட்டுத்தனமான சாமி” என்ற மாஸ் ஆன வசனத்துடன் இத்திரைப்படத்தின் டீசர் தொடங்குகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து வெளிவரவிருக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் டீசர் இதோ…
