இது டைம் டிராவல் படமேதான்? கூலி பட போஸ்டரின் மூலம் Confirm செய்த படக்குழு!

1 month ago 12
ARTICLE AD BOX

கூலி படத்தின் டிரெயிலர் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் எங்கு திரும்பினாலும் இத்திரைப்படத்தை குறித்த பேச்சுக்களாகவே இருக்கின்றன. அந்த வகையில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் குறித்தான அதிகாரப்பூர்வ அப்டேட் நேற்று வெளியானது. அதாவது இத்திரைப்படத்தின் டிரெயிலர் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அந்த நாளில் நடைபெறவுள்ளது. 

Decoding coolie movie trailer update poster as a time travel story

கூலி படத்தின் கதை?

சில நாட்களுக்கு முன்பு லெட்டர்பாக்ஸ்டு என்ற இணையத்தளத்தில் “கூலி” திரைப்படத்தின் Synopsis ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது தனது பழைய மாஃபியா கும்பலை உயிர்பிக்க, ஒரு வயதான தங்க கடத்தல் காரர் திருடப்பட்டு விண்டேஜ் கைக்கடிகாரங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு டெக்னாலஜியை பயன்படுத்துகிறார். ஆனால் தனது சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கும் திட்டம் அவரை குற்றத்தாலும் நேர ஒழுங்கு இல்லாமலும் உருவான ஒரு தனி உலகிற்கு கொண்டு செல்கிறது என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

The wait is over! The highly anticipated #Coolie Trailer from August 2💥#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishgangespic.twitter.com/DWERTKRaGL

— Sun Pictures (@sunpictures) July 28, 2025

இதன் மூலம் இத்திரைப்படம் ஒரு டைம் டிராவல் திரைப்படமாக இருக்க வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் கிளம்பின. அந்த வகையில் நேற்று டிரெயிலர் அப்டேட்டிற்காக வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்றில் ரஜினிகாந்தின் பின்புறம் கைக்கடிகாரம் ஒன்று உடைந்து நொறுங்கியிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் பல கதாபாத்திரங்களின் உருவங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் இது நிச்சயம் டைம் டிராவல் திரைப்படம்தான் என பல ரசிகர்கள் இணையத்தில் Decode செய்து வருகின்றனர். எனினும்  படம் வெளியான பிறகு இது உண்மையா? இல்லையா? என்பது தெரிய வரும். 

  • Decoding coolie movie trailer update poster as a time travel story இது டைம் டிராவல் படமேதான்? கூலி பட போஸ்டரின் மூலம் Confirm செய்த படக்குழு!
  • Continue Reading

    Read Entire Article