இது பிட்டு படத்தோட கதை மணி சார்?- தக் லைஃப் படத்தை கிழி கிழி என கிழித்த ப்ளூ சட்டை மாறன்…

3 weeks ago 25
ARTICLE AD BOX

கலவையான விமர்சனம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் நேற்று மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 

திரைக்கதையிலும் சரி கதையிலும் சரி எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை என விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் படத்தின் திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்வதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

blue sattai maran criticize thug life movie as adult movie

இது பிட்டு படத்தோட கதை?

“படத்தில் தனது வளர்ப்பு மகனான சிம்புவின் தங்கையான சந்திராவை (ஐஸ்வர்யா லட்சுமி) தேடிச் செல்கிறார் கமல்ஹாசன். சிகப்பு விளக்குப் பகுதிகள், மதுபான விடுதிகள், கிளப்புகள் ஆகியவற்றில் அப்பெண்ணை தேடுகிறார். அங்கே அவர் பார்க்கும் பெண்களை எல்லாம் சந்திராவா? என கேட்கிறார். அங்கே தென்படும் திரிஷா, ‘நான் சந்திரா கிடையாது இந்திரா’ என கூறுகிறார். 

சரி சந்திரா இல்லை என்றாலும் பரவாயில்லை, இந்திராவாவது கிடைத்ததே என்று அவரை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். இந்த விஷயம் சிம்புவிற்கு தெரிய வருகிறது. இதை தெரிந்துகொண்ட சிம்பு, இந்திராவை அடையத் துடிக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை வந்துவிடுகிறது. 

blue sattai maran criticize thug life movie as adult movie

அதன் பின் இத்திரைப்படம் ஒரு High budget மாமனாரின் இன்ப வெறியாக ஓடி முடிந்துவிடுகிறது. படம் என்னமோ கேங்கஸ்டர் படம் என்று சொன்னார்களே, நீ என்ன பிட்டு படக்கதையை சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்று கூட நீங்கள் கேட்கலாம். ஆனால் படத்தில் கேங்கஸ்டருக்கான எந்த விஷயமும் அவர்கள் செய்வதில்லை.

கமல்ஹாசன் ஜெயிலுக்குப் போனால் கூட அங்கே திரிஷா வந்துவிடுகிறார். அதன் பின் ஜெயிலில் இருந்து வெளிவந்த பிறகாவது கமல்ஹாசன் ஆக்சனில் இறங்குவார் என்று பார்த்தால் நேராக திரிஷா வீட்டிற்கு போய்விடுகிறார். அங்கே ஒரு நான்கு நாட்கள் தங்கிவிட்டு அதன் பிறகுதான் அபிராமி வீட்டிற்குச் செல்கிறார். இப்படி படம் எடுத்து வைத்தால் பிட்டுப்படம் என்றுதான் சொல்ல முடியும்” என தனது ஸ்டைலில் “தக் லைஃப்” படத்தை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவரது இந்த விமர்சனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • blue sattai maran criticize thug life movie as adult movie இது பிட்டு படத்தோட கதை மணி சார்?- தக் லைஃப் படத்தை கிழி கிழி என கிழித்த ப்ளூ சட்டை மாறன்…
  • Continue Reading

    Read Entire Article