ARTICLE AD BOX
படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர்
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் “வேட்டுவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆர்யா, கெத்து தினேஷ் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடிக்கின்றனர். அந்த வகையில் நாகப்பட்டிணம் பகுதியில் காரில் ஸ்டண்ட் செய்வது போல் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்ட போது ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மோகன் ராஜ் உயிரிழந்தது தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது விபத்து அல்ல, கொலை
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், “மோகன் ராஜ் வீடியோவை பார்த்தபோது இதனை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு எனக்கு கோபம் வந்தது. இவர்கள் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கிறார்கள். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இது போன்ற ஒரு சம்பவம்தான் நடந்தது.

ஒரு ஆளை உயிரோடு காருக்குள்ளே உட்கார வைத்து இது போன்ற காட்சிகளை எடுக்க வேண்டாமே. அதை எல்லாம் நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது” என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
