ARTICLE AD BOX
அதிரடி சோதனை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை டூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது. மேலும் இந்த முறைகேட்டில் திமுகவுக்கு நெருக்கமான பல புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடும் அடங்கும்.
ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனை ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ளதால் அவர் தயாரிப்பில் உருவாகி வரும் தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின் “பராசக்தி”, சிம்புவின் “STR 49” ஆகிய திரைப்படங்களின் உருவாக்கம் சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் தனுஷ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.
மொத்தமா முடிச்சி கொடுத்துடுவோம்
ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் “இட்லி கடை” திரைப்படத்தை தனுஷே இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் அமலாக்கத்துறை வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ள நிலையில் “இட்லி கடை” திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டதாம். இதனை தொடர்ந்து “இட்லி கடை” திரைப்படத்தை முழு திரைப்படமாக ஒப்படைத்துவிடலாம் என தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்.
“இட்லி கடை” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. இத்திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் வருகிற ஜூன் முதல் இத்திரைப்படத்தின் ரீரெக்கர்டிங் தொடங்கப்பட உள்ளதாம். இதற்கான செலவுகளை தனுஷே ஏற்கிறாராம். இவ்வாறு இத்திரைப்படத்தை தன் சொந்தக் காசை போட்டு மொத்தமாக முடித்துக்கொடுக்க தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்.