இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கு; ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? வசூல் ராணியாக மாறிய கல்யாணி! 

2 days ago 13
ARTICLE AD BOX

மாஸ் ஹிட் 

கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் “லோகா:சேப்டர் 1-சந்திரா”. இத்திரைப்படத்தை டாமினிக் அருண் என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். 

Lokah chapter 1 chandra movie gross collection is 200 crores

இத்திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம். இதில் அந்த சூப்பர் ஹீரோ கல்யாணி பிரியதர்ஷன்தான். இவருக்கு பல மாயாஜால சக்திகள் இருக்கும். இவர் யார்?  இவரின் பின்னணி என்ன? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. 

200 கோடி வசூல்!

இத்திரைப்படம் வெளியாகி 13 நாட்களே ஆகியுள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக வசூலை பெற்ற கதாநாயகியாக திகழ்ந்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இது மலையாள சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Your love makes us happy, grateful and humble. Thank you! ☺️#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @jakes_bejoy @chamanchakko @iamSandy_Off @santhybee @AKunjamma pic.twitter.com/N6gTC3p5UD

— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 10, 2025
  • 96 movie director next film with fahadh faasil சீயானை வெயிட்டிங்கில் வைத்துவிட்டு மலையாள நடிகருக்கு ஃபோன் செய்த 96 பட இயக்குனர்?  
  • Continue Reading

    Read Entire Article