ARTICLE AD BOX
ராஜ்கமல் பிலிம்ஸ்
தனக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் மூலம் 1980களில் இருந்து பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு அவர் தயாரித்து நடித்த “விக்ரம்” திரைப்படம் அவருக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் லைகா நிறுவனத்திற்காக “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் மீண்டும் தனது நிறுவனத்தின் மூலம் “அமரன்”, “தக் லைஃப்” போன்ற திரைப்படங்களை தயாரித்தார்.
“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். இத்திரைப்படத்தையும் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலமே தயாரிக்கவுள்ளார்.

இதுதான் கடைசி படம்…
இந்த நிலையில் கமல்ஹாசன் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளாராம். அதாவது இனி தனது சொந்த நிறுவனத்தின் திரைப்படங்களில் மட்டுமே கமல்ஹாசன் நடிக்க உள்ளாராம். இனி ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களில் மட்டுமே கமல்ஹாசன் நடிப்பாராம். இவ்வாறு ஒரு முடிவை அவர் எடுத்துள்ளாராம்.
“இந்தியன் 3” திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த வகையில் “இந்தியன் 3” திரைப்படம்தான் கமல்ஹாசன் வேறு நிறுவனத்தில் நடிக்கும் கடைசித் திரைப்படம் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனங்களின் தயாரிப்பிற்கு கீழும் நடிக்கமாட்டாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.
