ARTICLE AD BOX
டிரெண்டிங் ஹீரோயின்
“டிராகன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்தான் கயாது லோஹர். “டிராகன்” திரைப்படத்தில் பல்லவியாக வலம் வந்து ரசிகர்களை சொக்க வைத்த கயாது லோஹர் அதன் பின் டிரெண்டிங் கதாநாயகியாக ஆனார். “டிராகன்” படத்தை தொடர்ந்து “இம்மார்டல்”, “STR 49” ஆகிய திரைப்படங்களில் வரிசையாக ஒப்பந்தமானார். “டிராகன்” திரைப்படத்திற்கு முன்பே ஒப்பந்தமான “இதயம் முரளி” திரைப்படத்தில் இவர் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் கயாது லோஹரின் சம்பளம் குறித்தான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வளவு கோடி கேட்கிறாரா?
“டிராகன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கயாது லோஹர் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தற்போது பிசியாக வலம் வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஒன்றரை கோடி சம்பளம் கேட்கிறாராம். “டிராகன்” திரைப்படத்தில் ஒப்பந்தமானபோது அவரது சம்பளம் ரூ.20 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுதான் சரியான தருணம் என தனது சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.