ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் சென்னை பகுதியைச் சேர்ந்த சீதாராம் பிரசாத் என்பவர் வணிகவளாகம் கட்டி வாடகை விட்டுள்ளார்.
அந்த கட்டடத்தில் சத்யா ஷோ ரூம் இயங்கி வருகிறது, அவருக்கு சொந்தமான கட்டடத்தில் பின்னால் தனது நிலத்தில் சுற்று சுவர் சுற்று சுவர் ஒட்டியவாறு கோவா சங்கர் என்பவருடைய நிலம் உள்ளதால் தன்னுடைய நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியதற்கு தகராறு செய்துள்ளார்.
பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சியின் திமுகவின் 9 வது வார்டு கவுன்சிலர் ஜீவா, கோவா சங்கருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். ஜீவா, சீதாராம் பிரசாத் என்பவரிடம் சுவரை இடிக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் சீதாராம் பிரசாத் முறையாக அரசு சர்வேரை வைத்து அளவீடு செய்து அந்த இடம் அவருக்கு சொந்தமான இடம் என தெரியவந்தது.
இதையும் படியுங்க: போர் பதற்றம்…ஐபிஎல் தொடர் ரத்து : பிசிசிஐ அறிவிப்பு!
இதனால் அவர் சுவரை இடிக்க மறுத்துள்ளார், பின்னர் கோவா சங்கருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ஜீவா ஜேசிபி இயந்திரம் வைத்து காம்பவுண்ட் சுவரை இடித்து அகற்றியுள்ளார்,
இது தொடர்பாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் நிலத்தின் உரிமையாளர் சீதாராம் பிரசாத் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் அடிப்படையில் திமுக கவுன்சிலர் மற்றும் கோவா சங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் மீண்டும் சுற்று சுவரை கட்டிக்கொள்ள சம்மதம் தெரிவித்ததால் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சுற்று சுவர் கட்டுவதற்கு மீண்டும் ஜீவா, கோவா சங்கர் எதிர்ப்பு தெரிவித்ததால் இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்துள்ளார்.

அவர் புகார் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு திமுக கவுன்சிலர் ஜீவாவை போலீசார் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோவா சங்கர் ஜேசிபி ஆபரேட்டர் சீனு ஆகிய இருவரை ஊத்துக்கோட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
