ARTICLE AD BOX
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆனார்.
இதனை தொடர்ந்து கட்சியில் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் செங்கோட்டையன் தான் மனம் திறந்து பேசவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன்.
அப்போது பேசிய அவர், “கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும். அப்படி ஒன்றிணைத்தால்தான் நாம் வெற்றிபெற முடியும்.
மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை ஒருங்கிணைத்தால்தான் நமது கட்சி வெற்றிபெற முடியும். இன்னும் பத்து நாட்களில் ஒருங்கிணைக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் நான் பங்கேற்க மாட்டேன்” என காலக்கெடு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் கருத்து குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது பேசினார். “இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேசப்போவதாக கூறினார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவர் தெளிவாக கூறியிருக்கலாம்” என திருமா அப்பேட்டியில் பேசியுள்ளார்.

1 month ago
36









English (US) ·