ARTICLE AD BOX
மீண்டும் வெற்றிக்கூட்டணி!
ஃபகத் ஃபாசில்-வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த “மாமன்னன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம்தான் “மாரீசன்”. இத்திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஃபகத் ஃபாசிலும் வடிவேலுவும் சேர்ந்து பயணம் செய்வது போன்ற காட்சித் துணுக்குகளும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது போன்ற காட்சித் துணுக்குகளும் இடம்பெற்றிருந்தன. இது ரசிகர்கள் பலரின் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் சுதீஷ் சங்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது இத்திரைப்படத்தின் கதையை மிகவும் ஓப்பனாக கூறியுள்ளார்.

இதுதான் கதை!
இது குறித்து அவர் அப்பேட்டியில் பேசியபோது, “இப்படத்தில் வடிவேலு Alzheimer என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். அவரிடம் அதிகமாக பணம் இருப்பதை ஏடிஎம் பயன்படுத்தும்போது கண்டுபிடித்துவிடுகிறார் ஃபகத் ஃபாசில். அவரிடம் இருந்து பணத்தை பறிக்க திட்டமிடுகிறார். வடிவேலு திருவண்ணாமலைக்கு போவதாக சொல்கிறார். அவரை சமாதானப்படுத்தி பைக்கிலேயே நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை போகிறார்கள். அவரோடு இருந்து இணக்கமாக உரையாடி அந்த பணத்தை எடுக்க முடிந்ததா என்பதுதான் மீதி கதை” என கூறியுள்ளார். இவ்வாறு படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் கதையை வெளிப்படையாக கூறி ஆச்சரியப்படுத்திவிட்டார் சுதீஷ் சங்கர்.