ARTICLE AD BOX
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுக இடையேதான் போட்டி என அக்கட்சி தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “தவெக தலைவர் விஜய் தனது கருத்தைக் கூறியுள்ளார்.
பொதுவாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இது போன்று பேசுவார்கள். நாங்கள்தான் பிரதான எதிர்கட்சி என மக்கள் அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக்கொண்டனர்.
எங்கள் தலைவர்கள் அப்படி நாட்டை ஆண்டுள்ளனர். அதனால், எங்கள் கட்சித் தலைவர்களை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று திரும்பியது குறித்த கேள்விக்கு, பதில் அளிக்காமலே அங்கிருந்து இபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!
முன்னதாக, நேற்று நடைபெற்ற தவெக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அடுத்த ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலைச் சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையேதான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையேதான்” எனக் கூறியிருந்தார்.
அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

7 months ago
68









English (US) ·