ARTICLE AD BOX
இந்தியாவில் புகழ் பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். தனது வசீகர குரலால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளவர்.
இந்திதான் தாய் மொழி என்றாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் பிசிறு கூட இல்லாமல் தெள்ளத் தெளிவாக பாடுபவர்.
இதையும் படியுங்க : இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!
தற்போது பல இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வரும் ஸ்ரேயா, நாளை மார்ச் 1ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள கச்சேரியில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரேயா கோஷல், ஐட்டம் பாடலை பாடியதற்காக இப்போதும் நான் வருந்துகிறேன், அந்த பாடலை பாடியது நினைத்து வெட்கப்படுகிறேன் என கூறியுள்ளார்.
அந்த பாடல், இந்தியில் வெளியான அக்னிபாத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சமேலி பாடல். 5 மற்றும் 6 வயழது குழந்தைகள் கூட அந்த பாடலை பாடுகின்றனர்.
இது எனக்கு சங்கடமாக உள்ளது. அந்த பாடல் அர்த்தம் தெரியாமல் அவர்கள் ஆடி பாடுகின்றனர். ஏன் அந்த பாடலை பாடினேன் என் இப்போது வருந்துகிறேன் என கூறினார்.

8 months ago
72









English (US) ·