ARTICLE AD BOX
அறிக்கை போர்
ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு சமீப நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அவதூறு கிளப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ரவி மோகன் அனுப்பிய நோட்டீஸ்
இந்த உத்தரவை தொடர்ந்து ரவி மோகன், ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் தன்னை குறித்த பதிவுகளை உடனடியாக சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கவேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் ரவி மோகன் அனுப்பிய நோட்டீஸிற்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஆர்த்தி.
ஆர்த்தியின் அட்வைஸ்
அந்த நோட்டீஸை பகிர்ந்து நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஆர்த்தி, அந்த அறிக்கையின் மூலம், “மற்றவர் தமக்கு என்ன செய்யவேண்டும் என்று ஒருவர் விரும்புகிறாரோ அதையே தாமும் மற்றவர்களுக்கு செய்யவேண்டும். ஒருவர் தன்னை அவதூறு செய்வதை ரவி மோகன் விரும்பாதபோது தானும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

5 months ago
77









English (US) ·