ARTICLE AD BOX
குட் பேட் அக்லி படம் எதிர்பார்த்த வசூலைக் குவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவார் எனக் கூறப்படுகிறது.
சென்னை: இது தொடர்பாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசுகையில், “குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்தால் கண்டிப்பாக ஆதிக் தான் அஜித்குமாரின் 64வது படத்தின் இயக்குநராக இருப்பார். ஆதிக், அஜித்திற்கான கதையை கூட தயார் செய்து வைத்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
அஜித்குமார் ஆதிக்கை தயாராக இருக்கும்படி கூறியிருப்பார். குட் பேட் அக்லி வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் கண்டிப்பாக ஆதிக் தான் AK 64 படத்தின் இயக்குநர் என்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதில், அஜித்குமார் வரும் காட்சிகளும் ரசிகர்களை திருப்திபடுத்துபவையாக இருந்தன.

இதனையடுத்து, குட் பேட் அக்லி டீசர் அனிமேஷனில் பாசதானி அனிமேஷன் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த அனிமேஷன் வீடியோல் அஜித்தின் இளமைக்கால கெட்டப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் தின ஆஃபர் போல.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
முன்னதாக, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் விடாமுயற்சி என்ற படம் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. வணிக ரீதியாகவும் சறுக்கலைச் சந்தித்ததால், குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
