ARTICLE AD BOX

சுசி லீக்ஸ் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாடகி சுசித்ரா தற்போது அளித்திருக்கும் பேட்டி பற்றி தான் சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சுசி லீக்ஸ், தனுஷ், தன் முன்னாள் கணவரான கார்த்திக் குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி பேசியிருக்கிறார். இந்நிலையில் அவர் தமிழ் திரையுலகில் போதைப் பொருள் பழக்கம் சாதாரணமானது என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. தட்டி கேட்டவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!
அந்த பேட்டியில் சுசித்ரா கூறியதாவது, கார்த்திக் குமார் ஸ்டேஜ் ஏறினால் நாலு லைன் கொக்கைன் அடிச்சுட்டு வரானு எல்லோருக்கும் தெரியும். கமல் ஹாசன் பார்ட்டிகளில் எல்லாம் வெள்ளி தாம்பூலத்தில் கொண்டு வருவாங்க கொக்கைன். அதை வேண்டாம்னு சொன்னதுக்கு என்ன வச்சு செய்றாங்களா. கோலிவுட்டில் போதை கலாச்சாரம் சகஜமாக இருக்கிறது. அதை எதிர்த்து போராட முயன்று கொண்டிருக்கிறார் சரத்குமார். போதை கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளார் ராதாரவி, எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரத் தலைதூக்கியுள்ள நிலையில், பிரபல பாடகி ஒருவர், கமல்ஹாசனின் பார்ட்டியில் சகஜமாக போதைப் பொருட்கள் புழங்குவதாகக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்திலாவது நடவடிக்கை எடுக்க துப்பு இருக்கிறதா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “இது சாதாரணமாக கடந்து செல்ல முடியாத ஒரு குற்றச்சாட்டு, சம்பந்தப்பட்ட அனைவரையும் போதை மருந்து பரிசோதனை செய்ய வேண்டும், இவர்களை பிடித்தாலே போதும் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் சிக்கும்.
இதையாவது செய்ய துப்பு இருக்கிறதா..?” என்று முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
The station இதையாவது செய்ய துப்பு இருக்கிறதா..? பரபரப்பை உண்டாக்கிய சுசித்ரா ; திமுகவை விளாசும் அதிமுக..!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.