இதோட நிறுத்திக்கோங்க… திமுகவில் பட்டியலினத்தவரை தலைவராக்க முடியுமா…? எம்எல்ஏ வானதி கேள்வி..!!

11 months ago 99
ARTICLE AD BOX

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் பேசுவதாகவும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இலங்கை ராணுவத்தால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

திருவள்ளூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன்.வி பாலகணபதி அவர்களை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: குஷ்பு ஒதுங்கியதற்கு ராதிகா காரணமா….? நட்டாவுக்கு கடிதம் எழுதிய ரகசியம்… அதிர்ச்சியில் தமிழக பாஜக!!

பின்னர், அவர் பேசியதாவது :- மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதற்கான தேர்தல் அல்ல, இது இந்திய நாட்டிலே யார் மத்திய அரசாங்கத்தை அமைக்க போகிறார்கள் என்பதுதான் இந்ததேர்தல். பத்து ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்ற நரேந்திர மோடி தான் பிரதமராக வரப்போகிறார். உங்களிடம் வாக்கு கேட்டு வருபவர்களிடம் உங்களுக்கு வாக்களித்தால் யார் பிரதமராக வரப் போகிறார்கள் என ஒரு கேள்வி கேளுங்கள்.

பெண்கள் கௌரவத்தை உயர்த்தியவர் மோடி. பாஜகவிற்கு ஓட்டு போடாத நிலையிலே பார்த்து பார்த்து தமிழக மக்களுக்கு செய்தவர் மோடி. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, கழிப்பறை கட்டிடங்கள், வீடு இல்லா ஏழைகளுக்கு வீடுகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்திய நாட்டை உலக அளவில் உயர்த்தி காட்டியவர் மோடி. அதனால்தான் மோடி பிரதமராக வரப்போகிறார்.

கூட்டணியில் 9 பேர் நவரத்தினங்களாக சேர்ந்துள்ளனர். கூட்டணிக்காக வெற்றி பெற அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் பள்ளியில் அவர்களின் பிள்ளைகள் படிப்பதில்லை, ஆங்கில கல்வியாக அனைத்தையும் மாற்றி விட்டார்கள். அரசின் லேப்டாப் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். மகளிருக்கு இலவச பேருந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் பேருந்துகளே வருவதில்லை. உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: பிரதமர் மோடி நாளை சென்னையில் ரோட் ஷோ… முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு..!!

ஸ்டாலினின் சமூக நீதி அவரது மகனை அமைச்சர் ஆக்கினார். அவரது மகளை அமைச்சர் ஆக்கவில்லை. இதுவா சமூக நீதி..? திமுக இயக்கத்தில் தலைவராக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை ஆக்க முடியுமா..? திராவிட மாடலின் பெண்ணுரிமை ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். ஃபேரன் லவ்லி போட்டு பளபள என்று வருகிறீர்கள் என கூறுவது தான் திராவிட மாடல் பெண் உரிமையா..?

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக உள்ள சூழல் மாறி, லட்சக்கணக்கான மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வர பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜகவினர் வெற்றி பெறுவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் பேசுகிறது என்பதை சொல்வதற்காக மக்களிடம் நாங்கள் அதனை தெரிவித்தோம்.

முதல்வர் பாஜக காலூன்ற முடியாது என்றால் ஏன் எங்களைப் பற்றி பேசுகிறார்கள். பாஜகவை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழகத்திற்கு மோடி இன்னும் கூட பத்து முறை வருவார். எங்களுக்கு அது பிடித்திருக்கிறது. நீட்டுக்கு கையெழுத்து போடுவேன் என தெரிவித்த உதயநிதி, செங்கல்லை வைத்து என்ன செய்யப் போகிறார்.
மாநில மொழிக்கு பிரதமர் உரிய முக்கியத்துவம் தருகிறார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் துப்பாக்கி சூடு ஏதும் நடைபெறாமல், மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கினோம்.
நீதிமன்றம் சார்ந்த விஷயம். தமிழ் மொழியை வழக்காடு மொழியாக ஆக்குவதற்கு நாங்கள் குரல் கொடுப்போம், எனத் தெரிவித்தார்

இதில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பாமக மாவட்ட செயலாளர் விஎம் பிரகாஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக செயலாளர் சங்கர்ராஜா, சுதாகர், ஆர்எம்ஆர் ஜானகிராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

The station இதோட நிறுத்திக்கோங்க… திமுகவில் பட்டியலினத்தவரை தலைவராக்க முடியுமா…? எம்எல்ஏ வானதி கேள்வி..!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article