ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே. 50 வருடமாக சினிமாவில் நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
இவர் தற்போது கூலி, ஜெயிலர் 2 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2023ஆம் வருடம் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஷிவ் ராஜ்குமார், மோகன்லால், விநாயகன், தமன்னா உட்பட பலர் நடித்திருந்தனர். 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.
இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் விமர்சித்துள்ளார். அதாவது ஒரு படம் ஓட கதை தேவையில்லை, தமன்னா போதும் என ஜெயிலர் படத்தை அவர் நகைச்சுவையாக சுட்டிக் காட்டியுள்ளார்.
— 𝗥 𝗨 𝗞 𝗦 𝗛 ₳₳ 𝗡 (@BloodyHaterS) February 27, 2025இது குறித்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய விஜய் ரசிகருக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.