இந்த பாலா படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவேண்டியது! ஆனால் நான் கடவுள் இல்லை? 

6 days ago 15
ARTICLE AD BOX

நிறைவேறாத கூட்டணி

பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த விஷயமே. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் அஜித் இத்திரைப்படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது அஜித்தை பாலா தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடித்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் அது உண்மையல்ல, வதந்தி என்று பலரும் அடித்து கூறுகின்றனர். 

ajith was the first choice for nandha movie

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பலரும் அறியாத ஒரு தகவலை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

இந்த படம் அஜித் நடிக்க வேண்டியது!

“நந்தா படத்தில் முதலில் அஜித்தான் ஹீரோவாக இருந்தார். பாலா அஜித்திடம் கதை சொன்னபோது நான் பாலாவுடன்தான் அமர்ந்திருந்தேன். அக்காலகட்டத்தில் நானும் பாலாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். பாலா அத்திரைப்படத்தின் ஒன் லைனை மட்டும்தான் கூறினார். அதை கேட்டு அஜித் Impress ஆகிவிட்டார். 

ajith was the first choice for nandha movie

அதன் பின் கதை மற்றும் திரைக்கதை விவாதத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டில் அத்திரைப்படம் நடக்கவில்லை” என்று அப்பேட்டியில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பகிர்ந்துகொண்டார்.

திருப்புமுனையான திரைப்படம்

ajith was the first choice for nandha movie

2001 ஆம் ஆண்டு வெளிவந்த “நந்தா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் ரசிகர்களால் ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. 

  • ajith was the first choice for nandha movie இந்த பாலா படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவேண்டியது! ஆனால் நான் கடவுள் இல்லை? 
  • Continue Reading

    Read Entire Article