ARTICLE AD BOX
காக்கா-கழுகு கதை
“வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த் ரசிகர்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சச்சரவுகளும் விவாதங்களும் தொடங்கியது.
இதனை தொடர்ந்து “ஜெயிலர்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “காக்கா எப்பவுமே கழுகை சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால் கழுகு எப்போதுமே அமைதியாக இருக்கும். கழுகு பறக்கும்போது அதை பார்த்து அதை விட உயரமாக பறக்க வேண்டும் என காக்கா நினைக்கும். ஆனால் காக்காவால் அது முடியாது” என கூறினார். இந்த காக்கா-கழுகு கதையில் ரஜினிகாந்த் காக்கா என்று விஜய்யைதான் குறிப்பிடுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் மீம்கள் உருவாகின. இதனை தொடர்ந்து சில நாட்கள் சமூக வலைத்தளமே களேபரமானது.
ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் ரஜினிகாந்த்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.