ARTICLE AD BOX
டாப் அண்டு கியூட் நடிகை
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர்தான் அனுஷ்கா. பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்த அனுஷ்கா “சைஸ் ஸீரோ” என்ற திரைப்படத்திற்காக தனது உடல் எடையை கூட்டினார். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில் அதன் பின் அவரது உடல் எடையும் குறையவில்லை.
இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதன் பின் அவர் சினிமாவில் நடிப்பதை சற்று குறைத்துக்கொண்டார். இந்த நிலையில் சமீப காலமாக சில திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் அனுஷ்கா முன்னணி கதாநாயகியாக நடித்த “காட்டி” திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. கிரிஷ் ஜகர்லமுடி என்பவரின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

முதல் நாளே சுருண்டு படுத்த வசூல்…
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடி என கூறப்படுகிறது. அந்த வகையில் கணக்கிடும்போது முதல் நாள் வசூல் மிகவும் சுமாரான வசூலே ஆகும். இதன் மூலம் இத்திரைப்படத்திற்கு வரவேற்பு மிகவும் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
அனுஷ்காவின் “காட்டி” திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய் மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.
