ARTICLE AD BOX
நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது குபேரா. ராஷ்மிகா , நாகர்ஜூனா என பெரிய பட்டாளமே நடித்து வரும் இந்த படம் வரும் ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தெலுங்கு இயக்குநர் சேகர் ம்முலா இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் போய் வா நன்பா பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதே சமயம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து. இதில் பங்கேற்று தனுஷ் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை எமோஷனலாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் குபேரா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வட இந்தியாவில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியின் போது, தொப்பாளினி தனுஷை இந்தியில் ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார்.
— RamKumarr (@ramk8059) June 10, 2025உடனே அவர் மைக்கை வாங்கி, எல்லாருக்கும் வணக்கம் என தமிழில் பேச தொடங்கிய அவர், எனக்கு இந்தி தெரியாது, நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன், அதுவும் கொஞ்சம் தான் தெரியும் என கூற, கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.